ஏ.எல்.எம்.ஸினாஸ்-
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பின்தங்கிய தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த களப் பயணம் அமையவுள்ளதாக போரத்தின் இணைப்பாளர் யு.எல்.எம்.றியாஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் களப்பயணத்தில் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 25 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிப்புற்றுள்ள மக்களையும் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.