அமைச்சர் ரவூப் ஹக்கீம் அணர்த்த நிவாரண பணியில் (படங்கள்)

ஷபீக் ஹுஸைன்-
மைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணர்த்த நிவாரண குழுவும் கொழும்பு மாவட்ட கட்சித் தொண்டர்களும் நேற்று வெள்ளிக்கிழமை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைச்சர் ஹக்கீமினால் உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. வெல்லம்பிட்டி கொலன்னாவை கொடிகாவத்தை கொஹிலவத்தை உட்பட வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் பகல் உணவு கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பிரஸ்தாப நிவாரண நடவடிக்கையில் கலந்துகொண்டார். வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் வழிகாட்டலில் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையிலான கட்சியின் அனர்த்த நிவாரண குழு மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் கடந்த புதன் கிழமையிலிருந்து ஈடுபட்டுவருகின்றது.

வெல்லம்பிட்டி பகுதிக்கு சென்ற பின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பூ கொடை பிரதேசத்துக்கும் அமைச்சர் ஹக்கீம் சென்று நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும், அங்கு உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.
















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -