இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாகவும், 132க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
அதன்படி இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சேத விபரங்கள் வருமாறு,
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை - 103,776
பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை - 425,601
இறப்பு எண்ணிக்கை - 63 பேர்
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை - 29 பேர்
காணாமல் போணவர்களின் எண்ணிக்கை - 132 பேர்
முற்றிலும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 354
பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 3326
பாதுகாப்பு நிலையங்கள் - 597
முகாம்களின் எண்ணிக்கை - 63,370
முகாம்களில் உள்ள மக்கள் எண்ணிக்கை - 319,195 பேர்
கடந்து சில நாட்களாக அடாது பெய்து வரும் பெருமழையால், நாட்டின் அநேக பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மத்திய இலங்கையில் உள்ள மூன்று மலையோர கிராமங்கள் அடர்த்தியான செம்மண்ணால் புதையுண்டுள்ளன.