கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கும் விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கூறினார்.
வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அவசரமாக வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிலத்தை அடையாளம் காண்பதற்கு மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
கேகாலை, அரநாயக்க பிரதேசத்தில் மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய உள்ளிட்ட மாகாண சபையின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் முழுமையாக சேதமடைந்த வீடுகள் 152 ஆக பதிவாகியுள்ளது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 1189 ஆக பதிவாகியுள்ளது.