அரநாயக்க மண்சரிவில் காணாமல் போனோர் தொடர்பான தகவல் வௌியாகியுள்ளது...!

கேகாலை – அரநாயக்க – சாமசர கந்தையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 144 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரநாயக்க பிரதேச செயலாளர் ஷாம் பைசர் இதனை தெரிவித்துள்ளார்.

மண்சரிவு காரணமாக 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சாமசரகந்த மண்சரிவில் புதையுண்டு உடலமாக மீட்கப்பட்டவர்களின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.

மண்சரிவில் சிக்குண்டவர்களில் இதுவரை 17 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அடையாளங்காணப்பட்ட உடலங்கள் மாத்திரம் நாளை ஹத்கம்பொல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, வரகாபொல – தொரவக – மாதெனிய வத்த பிரதேசத்தில், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பிரதேசத்தை சேர்ந்த 8 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -