பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்த ஈஜிப்ட் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எஸ்.804 ரக விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் 59 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுள்ளது.
எகிப்து வான்வெளி பகுதியில் நுழைந்து 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது குறித்த விமானம் இரவு 2.45 மணியளவில் ராடாரில் இருந்து மாயமாகியுள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் எகிப்து இராணுவம் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே அந்த விமானம் மத்தியத் தரைக் கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
