லோயல் வெற்றிக்கிண்ணம் - 2016

எம்.ஜே.எம்.முஜாஹித்-
லுவில் லோயல் விளையாட்டுக்கழகத்தின் 8வது ஆண்டு நிறைவினையொட்டி அணிக்கு 7 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று ஒலுவில் லோயல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் 60 முன்னனிக்கழகங்கள் பங்கு பற்றி இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று லீ இஸ்டார் மற்றும் அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது.

இன்றய நாளின் முதலாவது போட்டியாக அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக் கழகமும் மற்றும் ஒலுவில் இலவன் இஸ்டார் விளையாட்டுக்கழகமும் அரை இறுதிப் போட்டியில் பங்கு பற்றி அதில் றஹீமிய விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி தனக்கு திவிக்கப்பட் 5 ஓவர்களில் 60 என்கின்ற பாரிய ஒரு வெற்றி இலக்கிணை இலவன் இஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கு விடுத்திருந்தது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் இஸ்டார் விiயாட்டுக்கழகம் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஓவர்களில் 32 ஓட்டங்களை மாத்திரம் பெற்று எதிர் அணிக்கு வெற்றியினை வழங்கியிருந்தது.

இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று லீ இஸ்டார் மற்றும் அக்கரைப்பற்ற றஹீமியா விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகம் முதலில் கலத் தடுப்பாட்டத்திற்கு இணக்கம் தெரிவித்து முதலில் அக்கரைப்பற்று லீ இஸ்டார் துடுப்பெடுத்தாடி தனக்கு வழங்கப்பட்ட 5 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 26 என்கின்ற வெற்றி இலக்கிணை எதிர் அணிக்கு வழங்கியிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகம் 3.1 பந்து வீச்சில் வெற்றியினை தனதாக்கிக் கொண்டது.

இதில் அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் மிகவும் திறமையாகவும் நுணுக்கமாகவும் பந்து வீசியிருந்தமையே வெற்றிக்கு வழி வகுத்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கு கௌரவ அதிதிகளாக சுகாதார சுதேச மற்றும் கிராமிய மின்சார சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், சுகாதார சுதேச மற்றும் கிராமிய மின்சார சமூக சேவைகள் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.எம். அமானுல்லா மற்றும் உயரதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று லீ இஸ்டார் அணிக்கு 15 000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. 

இறுதிப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகத்திற்கு 20 000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழகத்தின் வீரர் சுஹைப் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மற்றும் இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாகவும் இச்சுற்றுத் தொடரில் அதி கூடிய 6 ஓட்டங்களை பெற்ற வீரராகவும் அக்கரைப்பற்று லீ இஸ்டார் விளையாட்டுக்கழகத்தில் இருந்து அக்ரம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மற்றும் இச்சுற்றுப் போட்டியில் மிக நீண்ட 6 ஓட்டங்களை பெற்ற வீரருக்கான கிண்ணம் அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக்கழத்தின் நஜாத் தனதாக்கிக்கொண்டார்.

இப்போட்டிக்கு அங்கர் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -