தமிழர் தம் புத்தாண்டு எது?

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா-

துர்முகிவருட புத்தாண்டுக்கட்டுரை-13.04.2016.

மன்மதவருடம் இன்று துர்முகியாகிறது: அடுத்தவருடநாமம்ஹேவிளம்பி

உலகஇயக்கத்திற்குஉறுதுணையாக இருப்பது சூரியன்.தமிழர்கள் இயற்கையோடுவாழ்ந்தவர்கள். அன்று இயற்கையை தெய்வமாக வழிபட்ட அவர்கள் இன்றும் சூரியசந்திரரோடுதமதுவாழ்வியலையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வரையறுத்துக் கொண்டவர்கள்.

ஞாயிறுஒளிபரவாவிடின் வையகத்தில் விடிவில்லை. அகிலமும் அண்டசராசரமும் இருட்டு. சூரியபகவான் காலத்தைஅளப்பதற்கு மட்டு மல்ல உயிரின் தோற்றத்திற்கும் வாழ்க்கைக்கும் மூலவிசையாகத் தொழிற்படுகின்றார்.

ஆதிசங்கரர் தோற்று வித்த ஆறுவித வழிபாட்டில் சூரியவழிபாடும் ஒன்று. அதனை சௌரம் என அழைப்பர். விண்ணுலகத் தெய்வமான சூரியனோடு தொடர்புடைய விழாபொங்கல் விழா. அதேசூரியன் 12இராசிகளிலும் சஞ்சரித்துமீண்டும் மகரராசியில் பிரவேசிக்கும் தினம் புத்தாண்டாககொள்ளப்படுகிறது.

பிரம்மா உலகப்படைப்பை ஆரம்பித்த நாள் தான் புது வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தமிழர்தம் புத்தாண்டுஎது?

தமிழர்நாகரீகத்தில் மார்கழித்திங்கள் மதிநிறைநன்னாளில் புதிய ஆண்டு தொடங்குகின்றது. எனினும் தமிழருக்கென்று தமிழ்வருடம் தேவை யென்பதையுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்கள் கிறிஸ்துவுக்குமுன் 31ஆண்டுகளுக்கு முன் தோன்றியவள்ளுவரை மையமாகவைத்து தமிழ் ஆண்டை நிர்ணயித்தனர்.

அதன் பிரகாரம் கிறிஸ்து ஆண்டு 2016எனின் தமிழர்தம் திருவள்ளுவர் ஆண்டு 2047 எனலாம். குறிப்பாக தமிழரின் புத்தாண்டின் முதல்நாள் தைப்பொங்கல் தினமே. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.. என்பார் சான்றோர். 

முதல்நாள் அதாவது தைப்பொங்கலில் விளையும் மங்களம் அவ்வாண்டுமுழுவதும் தங்கும் என்பது ஜதீகம்.

தைப்பொங்கலில் உதயமாகும் தமிழர்க்கானபுதியஆண்டின் சித்திரைவருடப்பிறப்புஏப்ரல் மாதத்தில் 13 அல்லது 14ஆம் திகதியில் நிகழ்வதுவழமை. இவ்வருடம் புதிய வருடப்பிறப்பு தமிழர்மாதமாம் பங்குனிமாதம் 31ஆம் திகதி (ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி ) புதன்கிழமைமுன்னிரவு 6.36மணிக்கு பிறக்கிறது. அதாவதுசித்திரைமாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் முதல்நாள். 

மன்மதவருடத்திலிருந்து துர்முகிவருடம் பிறக்கின்றது!

தமிழர்பண்பாடுபாரம்பரியம் என்பது தொன்மையானது. அவர்கள் தமிழர் ஆண்டுகளை 60ஆகப்பிரித்து ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயரிட்டுஅழைத்தார்கள்.

தமிழர்தம் 60ஆண்டுகால வருடங்கள் முதல்வருடமானபிரபவவருடத்தில் தொடங்கி 60வது வருடமானஅட்சயவருடத்தில் நிறைவடைகிறது.

நடைமுறையிலுள்ள 29வது வருடம் மன்மதவருடமாகும். இன்றுபிறக்கும் 30வது வருடத்தின் பெயர் துர்முகி என்பதாகும். அடுத்தவருடத்தின் பெயர் ஹேவிளம்பிஆகும்.

ஆக பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டின் பெயர் துர்முகிஎன்பதாகும்.

ஓர் ஆண்டுசித்திரையில் தொடங்கி அடுத்தபங்குனியில் நிறைவடைகிறது. நடைமுறையிலுள்ள மன்மதவருடம் பங்குனி 31ஆம் திகதி அதாவது இன்று 13.04.2016 முன்னிரவோடுநிறைவுக்குவரபுதியதமிழ்ஆண்டானதுர்முகிவருடம் பிறக்கின்றது.

சுவாமிபிறந்ததுகரவருடத்திலா?

அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர் சுவாமிவிபுலானந்தர் பிறந்தகரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் நாளுக்கு நேரொத்தஆங்கிலத்திகதி 27.03.1892 எனகணிப்பிடப்படுகிறது. 

சுவாமியின் தந்தையாhர் பிந்திபதிவுவைத்தகாரணத்தினால் பெற்றபிறப்பத்தாட்சிப்பத்திரத்தைவைத்துக்கொண்டுசிலர் சுவாமி 5ஆம் மாதம் 03ஆம் திகதிபிறந்ததாக கூறுவதைமுற்றாகமறுக்கின்றேன். 

ஏனெனில் தமிழ்சித்திரைப்புத்தாண்டுபிறப்பதுசித்திரைமாதம் 1ஆம் திகதிஅதாவதுஏப்ரல் 14ஆம் திகதி. அப்படி 5ஆம் மாதம் எனின் கரவருடத்தில் சுவாமிபிறக்கவில்லை.மாறாகநந்தனவருடத்தில் பிறந்திருக்கவேண்டுமே. எந்தஒரு இடத்திலும் சுவாமி பிறந்தது கர வருடத்திற்குப் பதிலாக நந்தன வருடம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.எனவேசுவாமபிறந்தது 27.03.1892இல்தான் என்பதுநிருபணமாகிறது.

பாரம்பரியம்!

இந்நன்னாளில் எம்மவர்கள் மருத்துநீர் தேய்த்துசிரசில் கடப்பமிலையும் பாதத்தில் வேப்பமிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து புத்தாடை தரித்துகண்கண்ட தெய்வமாம் சூரியபகவானை வணங்கி பொங்கலிட்டு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு குரு பெரியார்களின் ஆசிபெற்று அறுசுவை உண்டியுண்டு உற்றார் உறவினர்களிடம் சென்று பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டு சுகமான நித்திரை செய்வது வழமையாகும்.

இலங்கையில் தேசிய நல்லுறுவுக்கான ஒரு தேசிய விழாவாக புத்தாண்டை இந்துதமிழரும் பௌத்தசிங்களமக்களும் இணைந்துகொண்டாடுகின்றனர் என்பதுசிறப்பம்சமாகும். இத்தினங்கள் தேசியவிடுமுறையாக இலங்கையில் பதியப்படுவதும் சிறப்பம்சமாகும்.

புத்தாண்டில் சுபநேரம் அதிமுக்கியத்துவம்!

இந்தவிழாவானதுசமயசம்பிரதாயங்களைஉள்வாங்கியவிழாவாகும். தமிழர்களின் பாரம்பரியங்கள் அதேபோல் சிங்களமக்களின் பாரம்பரியங்கள் பறைசாற்றப்படுகின்றதையாவரும் அறிவோம்.

இதில் குறிப்பாகசுபநேரம் என்பது முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. புத்தாண்டில் அனைத்து கருமங்களையும் சுபநேரம் பார்த்தே நிறைவேற்றுவார்கள்.

குறிப்பாகமருத்துநீர் தேய்த்தல் புத்தாடைபுனைதல் பொங்கலிடல் கைவிசேசம் புதியஉணவுஉண்ணல் செய்தொழில்செய்தல் அனைத்துமேசுபநேரம் பார்த்தேசெய்வார்கள். தலைக்குஎண்ணெய்வைத்தல் சிங்களபௌத்தர்கள் மத்தியில் பாரியபாரம்பரியநிகழ்வாககொண்டாடப்பட்டுவருகின்றது.

வசந்தகாலத்தில் இனஉறவுக்கானபுத்தாண்டு!

இலங்கையில் இக்காலம் வசந்தகாலம். குயில்கூவும் மரங்கள் பூக்கும் மனங்கள் விரியும் புத்தாக்கசிந்தனைகள் துளிர்விடும்.
இலங்கையில் அனைத்து பாகங்களிலும் புத்தாண்டு குதூகலம் இவ் வசந்தகாலத்தில் நிலவுவதுண்டு. குறிப்பாக நுவரேலியாவில் வசந்தகாலம் களைகட்டும். முழு இலங்கையர்களுமே ஜாதி மத பேதமின்றிஅங்கு கூடுவர். இரவுபகல் தெரியாதகாலம்.எங்கும் குதூகலம்.

தேசியநல்லிணக்கத்தில் சுவாமிவிபுலாநந்தர்!

இலங்கையில் கல்விமுறைமைஎப்படிஅமையவேண்டும்? இனநல்லிணக்கம் தேசியநல்லிணக்கம் எவ்வாறுஅமையவேண்டும்? என்பதை இற்றைக்கு 100வருடங்களுக்கு முன்பே ஓருதீர்க்கதரிசிசொல்லியிருந்தார்.
அவர்தான் அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமிவிபுலாநந்தஅடிகளார். ஆம் உண்மையில் அவர் ஒருதீர்க்கதரிசி.

அவர் அன்றுசொன்னது:

'பலமொழிக் கல்வி தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டினுள்ளும் நாடுகளிடையேயும் ஜக்கியத்தையும் உறுதிப்படுத்துகின்றது. சர்வதேச நல்லுறவையும் நன்முறையில் விருத்திசெய்வதற்குப் பலமொழிகளை ஆண்களும் பெண்களும் கற்றல் வேண்டும்'என்றார்.

பலதரப்பட்டபாசைகளைக் கற்பதனால் அறிவுவிசாலிக்கும் என்று கூறிய அவர் 
பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு அப்பால் தொழிற் கல்வியையும் வழங்குவதே விரிவுக்கல்வியாகும். நல்லதிட காத்திரமான உடல்நிலை உவப்பான உளவளர்ச்சிபன்பனவும் கட்டாயமானதுஎன 1941இல் கூறினார்.

அதனால்தான் 1970களில் ஜேவி பி புட்சி அதனைத் தொடர்ந்து பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் இலங்கை மக்களை நாட்டுப்பற்றுடைய மக்களாக மாற்ற வேண்டுமெனின் புதிய கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்றெண்ணி க.பொ.த. சா.தபரிட்சை நிறுத்தப்பட்டு பதிலாக தேசிய கல்விச் சான்றிதழ் எனும் புதியபரிட்சைமுறைமைஅறிமுகப்படுத்தப்பட்டது.

முக்கிய பாடங்களுடன் தொழிற்கல்வியும் உடற்கல்வியும் கவின் கலைகளும் கட்டாய பாடமாக்கப்பட்டன. இம்மாற்றம் முழுக்க முழுக்க விபுலானந்த அடிகளாரின் கல்விச்சிந்தனையில் எழுந்ததே என்பதையாரும் மறக்கமுடியாது.

விரிவுக்கல்வியில் பெரிதும் நாட்டமுள்ளதாகூர் காந்திபிறந்தநாட்டினில் இன்னும் விரிவுக்கல்விநடைமுறையில் இல்லையென்பது இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.


அப்படி இனங்கள் ஒன்றாகநல்லிணக்கத்துடனும் இன சௌயன்யத்துடனிருக்கவேண்டும் என்பதை அன்றேசிந்தித்தவர் சுவாமிகள். சிங்களமும் இஸ்லாமும் அறபும் சமஸ்கிருதமும் அவர் தோற்று வித்தகல்லடிசிவானந்தாவில் கற்பிக்க ஏற்பாடு செய்தவர். காத்தான்குடி முஸ்லிம் மாணவர்களும் பயில வேண்டு மென்பதற்காக அவர் சிவானந்தாவைகல்லடியில் அமைத்தார்.

புத்தாண்டில் புதியவாழ்க்கைஆரம்பம்!

பழையனகழிதலும் புதியனபுகுதலும் வழமையானதொன்றே. 

எனவே புத்தாண்டு பிறந்திருக்கின்ற இவ்வேளையில் எம்மிடையே உள்ளசிலதீய குணங்களை விடுத்து நல்லகுணங்களை நல்லபழக்க வழக்கங்களைபின் பற்றிஆரம்பித்தால் அதுவேபுத்தாண்டுக்குஅர்த்தம் சேர்க்குமெனலாம். 

எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்பதே இன்றையபிரார்த்தனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -