ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கள் அமைச்சருமான கௌரவ அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீம் அவர்கள் இன்று தனது ஐம்பத்தி ஆறாவது வயதில் காலெடுத்து வைத்துள்ளார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்த ரவூப் ஹக்கிம் அவர்கள்
முஸ்லிம் சமூகத்திற்காக பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் காத்திரமாக நின்று குரல் கொடுத்தவர் ஆவார் அது மட்டு மன்றி இன்று வரைக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றவரும் அவர்தான் என்பதை நாம் அறிந்ததே..
பல்வேறு பட்ட கழுத்தறுப்புக்கு மத்தியிலும் பலரின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அனைத்து சவால்களையும் இறைவன் உதவி கொண்டு சாணக்கியமாக முறியடித்தவர் முறியடித்துக் கொண்டிருப்பவர் என்றால் அது எம் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கிம் அவர்களே என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை
நாட்டின் தற்போதையே சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு சவாலாக யாப்பு திருத்தம் அமைந்திருக்கின்றதுத இந்த சந்தர்ப்பத்தில் அந்த சவால்களை வெற்றி கொள்ளவும் முஸ்லிம் சமூகத்தை ஒரு அணியில் திரட்டும் காத்திரமான பணியையும் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையுமே மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது
ஏனெனில் எமது திரு நாட்டில் சனத்தொகை அடிப்படையில் மூன்றாம் சாராராக வாழக் கூடிய எமக்கு உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் எமது சமூகத்தின் விடியலுக்காய் பாடு படுகின்ற கட்சி இது மாத்திரமே ஆகவே இலங்கையில் வாழ்கின்ற சிறு பான்மை முஸ்லிம்கள் அனைவரும் இவ் கட்சியின் கீழே ஒன்றினையே கடமைப்பட்டுள்ளோம்
அவ்வாறான தேசிய கட்சியின் எம் தேசிய தலைமையான ரவூப் ஹக்கிம் அவர்கள்தான்
இன்று தனது 56 வயதில் கால்தடம் பதித்திருக்கின்றார் அவர் இவ்வாரான சவால்களை எல்லாம் வெற்றி கொள்ளும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும்,மன தைரித்தையும் நீண்ட ஆயுளையும் வல்லோன் அல்லாஹ் வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சார்பாக எம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கல்குடா
வை.எம்.பைரூஸ்
