மர்ஹூம் முஹம்மது அவர்களின் ஜனாஸாவுக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்...!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான மூத்த அரசியல்வாதியான எம்.எச்.முஹம்மத் தனது 97வது வயதில் இன்று (26) வபாத்தானார் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமானார்.

இவர் கடந்தகால அரசாங்கங்களில் தொழில் அமைச்சராகவும், போக்குவரத்து மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகவும், இலங்கையின் 14வது சபாநாயகராகவும், நகர அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளையும் வகித்ததுடன் சிறந்த ஒரு கல்விமானாகவும், சமுக சேவையாளனாகவும் காணப்பட இவர் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உருவாக்கத்திற்கு காரணமானவர் என்றும் இவர் மூலமே இந்த அமைச்சு உருவானது எனவும் முஸ்லிம்களின் பொற்காலம் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு பெற்ற பிரதிப் பணிப்பாளர் மீரா முஹைதீன் தெரிவித்தார்.

இவரின் இழப்பு முஸ்லிம் சமுகத்திற்கு மட்டுமல்லாது முழுச் சமுகத்திற்கும் பாரியதொரு இழப்பாகும். காரணம் இவர் பாரபட்சமற்ற வகையில் சகல இனங்களையும் அரவணைத்து சமுக ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்பதுடன் அனைவருக்குமே உதவிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம் முஹம்மது அவர்களின் ஜனாஸா வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்று மரியாதை செலுத்தி அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவரின் ஜனாஸா இன்று அஸருக்குப் பின்னர் குப்பியா வத்தை முஸ்லிம் மையவாடியில் நலடக்கம் செய்யப்பட்டது. இதன்போது இன, மத பேதமின்றி பெருந்திரலானவர்கள் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டிருந்தனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -