ஊவா மாகாண சபை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர் ஹலீம் சந்திப்பு..!

இக்பால் அலி-
ம்முறை பதுளை மாவட்டத்தில் நடைபெறும் தேசிய மீலாத் விழா தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மற்றும் ஊவா மாகாண முதல் அமைச்சர் சாமர சம்பத் திசாநாயக ஆகிய இருவர்களுக்கிடையிலான சந்திப்பு முதல் அமைச்சர் அலுவலகத்தில் 10-04-2016 நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் ஏற்பட்ட கலந்துரையாடலின் போது அமைச்சர் ஹலீம் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறும் தேசிய மீலாத் விழாவுக்கு ஊவா மாகாண சபை முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாக ஊவா மாகாண முதல் அமைச்சர் சாமர சம்பத் திசாநாயக அமைச்சரிடம் அங்கு தெரிவித்தார்.

ஊவா மாகாண கலாசார அமைச்சிலிருந்தும் மற்றும் தம்முடைய முதல் அமைச்சரின் நிதியிலிருந்தும் ஏனைய அமைச்சுக்களிலிருந்து இந்த தேசிய மீலாத் விழாவுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கவுள்ளதாக முதல் அமைச்சர் அங்கு கருத்தினைத் தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் ஹலீம் இந்தக் கலந்துரையாடலின் போது விசேட அம்சமாக பதுளை மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத்தினால் ஊவா மாகாண சபையில் முஸ்லிம்களுக்கென தனியானதொரு பிரிவும் மற்றும் மாவட்டத்திலுள்ள 23 முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக் குறை ஆகிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் ஹலீமிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் இங்கு முதல் அமைச்சரிடம் இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர்pன் இணைப்புச் செயலாளர் ரமீம், பதுளை மாவட்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் இணைப்புச் செயலாளர் அஷ்யெ;க் அப்துல் லத்தீப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -