‘பச்சை’ கண்டு திரும்பிச் சென்ற தயாசிறி



பொல்கஹவலயில் புதிய பாலம் ஒன்றின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நடும் விழாவுக்கு வருகை தந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நிகழ்வில் பங்கேற்காது திரும்பிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

தயாசிறி மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த நிகழ்வினை பிரதேச ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிபலிப்பதாகவும் கட்சியின் தேவைக்காக இடம்பெறுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையால் அதிருப்தியடைந்த தயாசிறி நிகழ்வில் கலந்து கொள்ளாது திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆட்சியிலிருப்பது ‘எவ்வகையான’ அரசாங்கம் என்பதைக் கூடப் புரியாத அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் தனக்கு உடன்பாடில்லாததல் வெளியேறியதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -