ஊடகத்துறைக்கு எடுத்துக்காட்டும் நடுநிலமைக்கு ஒரு சான்றுமான இம்போட்மிரர் நளீரின் பார்வையில்-படங்களுடன்

லங்கையின் செய்தித் துறையின் முன்னோடி இணையங்களுள் தரமானதும், உண்மைத்தன்மை வாய்ந்ததும், பக்கச்சார்பற்றதுமான தகவல்கள், செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனையில் தலைமையகத்தையும், டுபாய், கட்டார் , சவூதி அரேபியா போன்ற தேசங்களில் துணை அலுவலகங்களையும் கொண்டியங்கும் ‪#‎இம்போட்_மிரர்‬
செய்தித்தளம், ‪#‎சிகரம்_இணைய_வானொலி‬ போன்ற நிறுவனங்களின் 6வது அகவைக் கொண்டாட்டமும், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை 24.04.2016 ம் திகதி காத்தான்குடியில் அஷ் ஷஹீட் அகமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளருமான தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ்  தலைமையில் வெகுக் கோலாகலமாக நடந்தேறியது.


இந்நிகழ்வு இரு கட்டங்களாக 01, காலையில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சியும் 02. மாலையில் பாராட்டும் கெளரவிப்பும் நிகழ்வுமாக இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதல் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களும், இரண்டாம் கட்ட நிகழ்வின் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஷிப்லி பாறூக் கெளரவ அதிதிகளாக உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் எஸ்.எம்.சபீஸ்,
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், டாக்டர் பறூஸா நக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வளவாளர்களாக, 
சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்டீன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஒலிபரப்பாளரும், அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும், இலக்கிய விமர்சகரும் தமிழ் ஆசிரியரும், அலிஷ் நியூஸ் இணையத்தள பணிப்பாளருமான ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோரும் கலந்து ஊடகவியலாளர்களுக்கு நல்ல பல சக்தி மிக்க கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தமை சிறப்பாக அமைந்தது.

மேலும், இம்போட் மிரர் நிறுவணத்துக்காக தன்னை உருக்கி உழைத்த உறுப்பினர்களுக்கு அதிதிகளால் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்ததுடன் பாராட்டியும்,வாழ்த்தியும் உரை நிகழ்தினர்.

அது மட்டுமல்லாமல் விழாவுக்கு வருகை தந்நிருந்த அதிதிகளை இம்போட் மிரர் நிறுவணமும் சும்மா வெறுமனே விட்டு விடவுமில்லை அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ.சேட் ,வழங்கி அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்திக் கௌரவித்தமையானது விழாவை இன்னும் பல படிகள் உயர்த்தி விட்டது என்றே சொல்லவேண்டும்.

இன்னும் இந்நிறுவனத்தின் அதீத உயர்ச்சிக்காக அர்ப்பண சிந்தையோடு பணியாற்றிய திருமதி முனாஸ், மற்றும் முனாஸ் அவர்களது அன்புத் தாயார் மற்றும் பணிப்பாளர் முனாஸ் அவர்களை நிறுவனத்தின் உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி சந்தோசத்துடன் கௌரவித்தமையானது உண்மையிலேயே எனது கண்களைப் பனிக்கச் செய்தன.

இறுதியாக ,
செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து பயிலுனரகளுக்கும், ரீ.சேட், சான்றிதழ்கள் என்பன அதிதிகளால் உவந்தளிக்கப்பட்டு விழா நிகழ்வுகள் பூரணமான மனத்திருப்தியுடன் இனிதே நிறைவுற்றது.....

#இம்போட்_மிரர் ஊடக வலையமைப்பு இமயத்தை விடவும் உயர வேண்டும் என மனம். நிறைய வாழ்த்துகிறேன்.

- நன்றி -
© எம்.ஐ.எம்.நாளீர், 
அக்கரைப்பற்று,
26042016.


உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -