பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன பயணம் காலத்திற்கு ஏற்ற சிறந்த முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அகுனகொலபெலஸ்ஸ – அலுத்வெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்த பணியை மேற்கொண்டிருக்கிறது.
நட்பு நாடான சீனாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறியிருந்தேன்.
சீனாவிடம் இருந்து கிடைக்கும் செயற்றிட்டங்களை முறையாக செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
வாகனமாக இருந்தாலும், இயந்திரமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் செயற்படாமல் இருந்தால் பழுதடைந்து விடும்.
அதேபோன்று ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களை முறையாக தொடராத பட்சத்தில் அதன் பயன்பாடு பின்னடைவை எதிர்நோக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
