அப்துல் அஸீஸ்-
மாற்றுத்திரனாளிகளுக்கான மருத்துவ முகாமும், அரசாங்க கொடுப்பனவுகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று (09) கல்முனை கிரீன் பீல்ட் முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை திறந்த சாரணிய அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் மன்றம் ஆகியவற்றின் அனுசரனையுடன் வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகள் கலந்துகொண்டு நன்மையடையலாயினர்.
கல்விக்கல்லூரி முன்னால் விரிவுரையாளரும், மாவட்ட சாரணிய அமைப்பின் முன்னால் ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில், அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எ.எல்.எப்.ரஹ்மானினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


