உஷ்ணமும் ஊரும்
++++++++++++++++
கூரையால சூடிறங்கி
குடலையும் கருக்கிறது
வேறையா சூரியன்கள்
வீட்டுக்குள் எரிகிறன.
பள்ளிக்குப் போக என்று
பாதையில் இறங்கினால்
கொள்ளியை வைத்தது போல்
கொதிக்கிறது மண்டை
கொங்றீட்டு ரோட்டு
கொதித்து நெருப்பாகி
கிங்கொங் குரங்காக
கிளியைத் தருகிறது.
கா பட்டு ரோட்டு
கால் பட்டாத் தீக்கிறது
சோப் போட்டுக் குளித்தாலும்
சொறிகிறது உடம்பெல்லாம்.
வீட்டுக்குள் போட்ட பேன்
விடாமல் சுற்றினாலும்
சூட்டோடு காற்றள்ளி
சுருட்டி எரிக்கிறது.
கொடும் வெயிலில் செல்வோர்க்கு
குளிர் பானம் கொடுப்பதற்காய்
நடு ரோட்டில் நின்று சிலர்
நன்மைகள் தேடுகிறார்.
இந்தச் சூடு போய்
எப்ப மழை வருமோ
அந்த அல்லாஹ்விடம்
அழுது கேட்கின்றோம்.
Mohamed Nizous
