எம்.ஐ.எம்.சிஹான் -
2016ம் ஆண்டுக்கான அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியின் முதலாவது போட்டியான கரப்பந்தாட்டம் (volleyball) அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (13.04.2016) இடம்பெற்றது.
இந்த போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு அஷ்ரஃப் விளையாட்டு கழகமும் நடப்பு சம்பியனான ஸம் ஸம் விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் 2-0 என்ற கணக்கில் அஷ்ரஃப் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவிகரித்துக்கொண்டது.
வெற்றி பெற்ற நிலையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டு கழகம் மாவட்ட மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


