யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள்)

பாறுக் ஷிஹான் (யாழ் பிராந்திய நிருபர்)

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை(18) ஆரம்பமாகின. இதன் போது காலை முதல் மாலை வரை சைக்கிள் ஓட்டம் மரதன் ஓட்டம் அழகு ராணி போட்டி கிறீஸ் மரம் தலையணை சமர் சட்டி உடைத்தல் விநோத உடை போட்டி சங்கீத தொப்பி மாற்றல் யானைக்கு கண் வைத்தல் பணிஸ் சாப்பிடுதல் பலூன் உடைத்தல் தேங்காய் திருவுதல்.கயிறு இழுத்தல் றபான் அடித்தல் சாக்கு ஓட்டம் என்பன இடம்பெற்றன.

இப்போட்டிகள் திறந்த போட்டிகளாகவும் ஆண் பெண் குழந்தைகளுக்குமான போட்டிகளாகவும் அமைந்ததுடன் உள்ளுர் போட்டியாளர்கள்,பொலிஸாரின் குடும்பத்தினர் அதிகளவாக பங்குபற்றினர்.

இந்நிகழ்விற்கு வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பெர்ணாண்டோ ,பொலிஸ் உயரதிகாரிகள்,அரச அதிகாரிகள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கினர்.

இறுதியாக இசைநிகழ்வு நடைபெற்று புத்தாண்டு நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவடைந்தன.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -