கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரை அகில ,லங்கை மக்கள் காங்கிரசில் இணைத்ததுக்காக கப்பம் பெற்றுக்கொண்டவர்தான் அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் வஹாப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் 4ஆம் வட்டாரத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (01.03.2016) நேற்று ஏறாவூரில் நடைபெற்றது ,தன்போது உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அகில ,லங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவர்தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் ஹாஜியார். இவர் கிழக்கு மாகாண சபைக்கு ,ரண்டுமுறை மக்கள் ஆணையைப் பெற்று இந்த சமூகத்தின் குரலாக ஒலித்தவர் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.
கிழக்கு மாகாண சபையிலே ஐந்து வருடங்கள் உறுப்பினராகவிருக்கின்ற ஒருவருக்கு அரசாங்கத்தினால் சுமார் 80 லட்சம் ரூபா பெறுமதியான வாகான அனுமதி பத்திரம் (பேமிட்) வழங்குவது வழக்கமாகும். அவ்வாறானதொரு பேமிட் இந்த சுபையிர் ஹாஜியாருக்கும் கிடைத்த போது அதில் தனக்கும் சரி சமபங்கு தரவேண்டும் என சண்டையிட்டு 23 லட்சம் ரூபாய்களை
பரித்துச் சென்றவர்தான் இந்த அமீர் அலி இதனை மறுக்கமுடியுமா எனக்கேட்டுக்கொள்கின்றேன்.
அகில ,லங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு தங்களை
மடடும் வளர்த்துக்கொள்வதற்கு எத்தனிக்கும் ,வ்வாறானவர்களை நாங்கள் கட்சியை விட்டு தூக்கியெறிந்துள்ளோம். எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிகளுக்கெதிராக நாங்கள் நீதி மன்றம் சென்றிருக்கின்றோம். ,ன்ஷா அல்லாஹ் எங்களுக்கே வெற்றி
கிடைக்கும் குறிப்பாக கட்சியினுடைய செயலாளராக வை.எல்.எஸ் ஹமீட் தான் தற்போதும் இருக்கின்றார். அதே போன்றுதான் கட்சியினுடைய கொள்கை பரப்புச் செயலாளராக சுபையிர் ஹாஜியாரும் ஏறாவூர் அமைப்பாளராக நானும் இன்றும் செயற்பட்டுவருகின்றோம். தற்போதும்
கட்சி எங்களிடம்தான் இருக்கின்றது. நாங்கள்தான் கட்சியினுடைய தலைவரையும் தவிசாளரையும் வெளியேற்றிருக்கின்றோம்.
எங்களுக்கு எதிராக செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இவர்களுடைய பித்தலாட்டங்களை எதிர்வரும் காலங்களில் மக்கள் மத்தில் பகிரங்கப்படுத்தவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



