துருக்கி இராணுவத்தினர் ஸிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது செல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உள்ளுர் செய்திகள் திங்களன்று தெரிவித்தன.
துருக்கிய படையினர் சுமார் 50 தொடக்கம் 60 ஆட்டிலெறி மற்றும் செல்தாக்குதல்களை ஸிரியாவின் வடபகுதியான அலெப்போ மாகாணத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது மேற்கொண்டுள்ளனர்.
தற்காலிக யுத்த நிறுத்தம் சிரியாவில் அமுலில் உள்ளது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த யுத்த நிறுத்தத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச கூட்டணியில் அங்கம் வகிக்கும் துருக்கி பல வாரங்களுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீது மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் தலைமையில் ஸிரியாவில் தற்காலிக யுத்த நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-காயிதான் பங்காளிகளான அல்-நுஸ்ரா முன்னணி ஆகிய தீவிரவாதிகளுக்கும் இந்த யுத்த நிறுத்தம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.tamilsheeya
