நாசிறூன்-
நல்லாட்சி அரசின் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சின் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் (ஹோப் 2016) வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான (யொவுன்புர) நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேர்ப்பதற்காக இந்தியாவின் Audacious Dreams Foundation நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான திரு. தினேஷ் கஜேந்திரன் அவர்கள் தலைமையிலான 10 பேர் கொண்ட கொண்ட குழு எதிர்வரும் 2016.03.29 செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
நாங்கள் இலங்கையில் பல நிகழ்வுகளுக்கு எங்கள் பிரதிநிதிகளை இங்கு அழைத்து வந்திருக்குறோம் இங்கு கற்றுக்கொள்ள வேண்டிய சுவாரஷ்யமான பல விடயங்கள் உள்ளன, அது மட்டுமல்லாது இலங்கையின் இளைஞர் சேவை மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பல வித்தியாசமான நிகழ்வுகளை ஒழுங்கமைத்து அதில் வெளிநாட்டவர்களும் பங்கு கொள்ள வேண்டும் என நினைப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.
அதேவேளை எங்கள் Audacious Dreams Foundation இலங்கை அரசுடனும் குறிப்பாக இளைஞர் சேவை மன்றத்துடனும் நேரடியான மிக நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை பெரு மகிழ்ச்சியை தருகின்றது எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது எங்கள் நாடு இளைஞர்களுக்கு சிறந்த ஓர் உதரணமாக எங்கள் அயல் நாடான இலங்கை இருப்பது பெருமையாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார் .
இதேவேளை கடந்த 2015ம் ஆண்டு இலங்கை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் Audacious Dreams Foundation இணைந்து ஒழுங்கமைத்த இளைஞர்களுக்கான பேரவை மாநாடு ஒன்றும் இரு நாடு இளைஞர் யுவதிகளுக்கிடையில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.