எம்.ரீ.ஹைதர் அலி -
கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி மாடறுப்பு மடுவதிற்கு 2016.03.28ஆந்திகதி திங்கட்கிழமை திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு மடுவத்தினுடைய நிலைமைகளை நேரில் சென்று அவதானித்தார்.
கடந்த சில நாட்களாக மாடறுப்பு மடுவத்தில் துர்வாடை வீசுவதனால் அப்பிரதேச சுற்றுச்சூழல், மற்றும் வளி மாசடைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தொலைபேசியினூடாக மாகாண சபை உறுப்பினலுக்கு செய்த முறைபாட்டினை அடுத்து இன்று அதிகாலை அங்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரிடமும் அங்குள்ள நிலைமையைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன், மடுவத்தினை சுற்றி பார்வையிட்டார், அங்கு துர்வாடை எழுவதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், ஆலோசனைகள் என்பவற்றினை வழங்கி அதனை உடனடியாக தீர்ப்பதற்கான பணிப்புரையினை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 01.00 மணியளவில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் UL. நசீர்தீன், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், மாடறுப்பு மடுவத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் மாடறுப்பு மடுவம் மற்றும் பொதுவான சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் மக்களின் நலன்கருதி பொது சுகாதாரம் தொடர்பாக எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபையுடன் இணைந்ததாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் வாரமளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் தலைமையில் நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.