குழு மோதலில் தொடையில் கடித்ததாக பொலிஸில் முறைப்பாடு..!

க.கிஷாந்தன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை - கட்டுக்கலை தோட்டத்தில் வருடாந்த திருவிழாவின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில் குறித்த நபர் ஒருவர் மற்றொருவரை தொடையில் கடித்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கால் மற்றும் முதுகுப்பகுதியில் கடியுண்ட நிலையில் பலத்த காயங்களுடன் குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டுகலை தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் விழாவின் போது இரண்டு குழுக்கள் மது அருந்திவிட்ட வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது வாய்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இம் மோதலின் போது இளைஞன் ஒருவர் பலத்த கடி காயங்களுக்கு ஆளாகியுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -