மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்ட மண்டபத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பானின் சுகுபா நகரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜப்பானில் வாழும் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமல் வீரவன்ச, ரோஹித்த அபேகுணவர்த்தன ஆகியோரும் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்களின் வருகை இன்மை காரணமாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தின் தொண்ணூறு வீத இருக்கைகள் காலியாக இருந்துள்ளன.
இதற்கிடையே குறித்த கூட்டத்தில் ஸ்கைப் வழியாக உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோத்தபாய ராஜபக்சவிடம் பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் வழியாக வெற்றுக் கதிரைகளுக்கே உரையாற்றியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
