பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்த பைந்தமிழ்க்குமரன் ஜெ.டேவிட் எழதிய சிறுகதைகளின் தொகுப்பான 'கானல் வசந்தங்கள்' நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (28-02-2016) எழுத்தாளர் உமாவரதராஜன் தலைமையில் கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு பேராசிரியர் மௌனகுரு, கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ், எஸ்.அரசரெத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் டொக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் நூலை வெளியீட்டு வைத்தார தொழிலதிபர் வேல்நாயகம் அழகுராஜா, டொக்டர். இ.சிறிநாத், டொக்டர். ஜெயசுதன் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
நூலாசிரியரின் சேவையைப் பாராட்டி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மயில்வாகனம், டொக்டர் கே.ஜெயசுதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் கவிஞரும் ஊடகவியலாளருமான அதிபர் செல்லையா பேரின்பராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்வில் பெரும் அளவில் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், கல்வியலாளர்களும்; கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தலைமையுரையில் உமாவரதராஜன்
எழத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்பியவர்கள் நம்புகின்றவர்கள் எல்லாக்காலங்களிலும் இருந்த வந்திருக்கின்றார்கள்.
சிறுகதைகள் பற்றிய வரையறைகள் இன்று மிகவும் மாறிவிட்டன சிறுகதையில் ஒரு மையம் இருக்க வேண்டும் அசத்தலான ஆரம்பம் சுவாரஸ்யமான வளர்ச்சி குறுகிய கால நிகழ்வு குறைந்த பாத்திரங்கள் எதிர்பாராத முடிவு போன்றவை சிறுகதையின் லட்சனங்கள் என்றெல்லாம் ஒரு காலத்தில் கருதினோம்.
ஆனால் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இன்றைக்கு ஏராளமான மாற்றங்கள் வந்து விட்டன வடிவங்கள் மீறியும் மையங்களை நிராகரித்தும் கதை என்ற அம்சத்தை நீக்கம் செய்தும் இன்றைய சிறுகதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் முதலில் அறிய வேண்டும்.
எழுழத்துக்களால் சமூகத்தைத் திருத்திவிட முடியும் என்று நம்பியவர்கள் நம்புகின்றவர்கள் எல்லாக்காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றார்கள்; எழுத்தின் சமூகப் பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன நூலாசிரியர் டேவிட் அவர்களின் நம்பிக்கை உன்னதமான நோக்கம் கொண்டதாகும்.
ஆனால் டேவிட்டின் உறைப்பான வார்த்தைகளை நீதி போதனைகளை நல்லுபதேசங்களை ஒரு காண்டாமிருகங்கம் ஈர்க்குக் குச்சியால் அடி வாங்குவதைப்போல இந்த சமூகம் செவிமடுத்துக் கொண்டேயிருக்கும் ஆனால் ஒரு போதும் அது அசைந்து கொடுக்காது இததான் நிதர்சனம்.
'கண்டவனெல்லாம் எழுத வந்து விட்டான்'என இவர்கள் அங்கலாய்ப்பதுண்டு இந்த அங்கலாய்ப்புக்குப்பின்னால் இருப்பது ஒரு மேலாதிக்க சிந்தனையைத் தவிர வேறொன்றுமில்லை இது ஜாதித் திமிர் இன வெறி மதப் பித்து போன்றவற்றுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத மேலாதிக்க சிந்தனையின் இன்னொரு வடிவம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
சிறப்புரையில் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ்
உலகமயமாதலுடன் தொடர்பான பண்பாட்டு மேலாதிக்கமும்; அதன்வழியாக எழும் மனித உணர்வுகளின் நுன்னதிர்வுகளும் சிறுகதைகளாக எழுதூரம் பெற்றுகின்றன
உலகமயமாதலுடன் தொடர்பான பண்பாட்டு மேலாதிக்கமும்; அதன்வழியாக எழும் மனித உணர்வுகளின் நுன்னதிர்வுகளும் சிறுகதைகளாக எழுதூரம் பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டம் இதுவாகும் புதிய நுகர்வுத்தன்மைகளுக்கு அடிமையாதலும் நுகர்ச்சிப்பொருட்களை அடியொட்டி அந்தஸ்த்து தீர்மானிக்கப்படுவதற்கான மாயநிலை சுற்றியிருப்பதும் கூட சிறுகதையாக்கங்களாக இன்று மேலௌத் தொடங்கியிருக்கின்ற காலம்.
மல்டி கல்ச்சரிசம் என கூறப்படுகின்ற பன்னிலைப் பண்பாட்டியிலை அடிப்படையாகக் கொண்ட பதிவுகளும் வேறொருபக்கம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன ஒரு குறிப்பிட்ட பிரதேசததிற்குள் வௌ;வேறு பண்பாட்டுக் கோலங்களை அங்கீகரிக்கக்கப்போவதும் முரண்பாடுகளை மேல்நிலையில் வைத்து அணுகுதலும் பன்நிலைப் பண்பாட்டில் அடங்குகின்றன இங்கே தத்தமது இனக்குடும்பங்களின் தனித்துவங்களை எடுத்துக்காட்டவெளிக்காட்ட முற்படுவதும் மேலோங்கியிருக்கிறது.
இவற்றோடு பொருந்திய நிராகரிப்பு ஒடுக்குமுறைகள் மேலாதிக்கம் மனித உரிமைப் பிரச்சினைகள் அடிப்படைவாதம் பால்நிலைப்பிரச்சினைகள் பாலியல் நெறிவிறள்வு சூழல் அழிவு யுத்தம் என்றவாறு பொதுவான மானிடப்பிரச்சினைகள் பரவிப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன இவை இன்றைய சிறுகதையாக்கங்களுக்குரிய வளங்களாகக் களம் கொள்கின்றன இவற்றை வெளிப்படுத்தும் சிறுகதைச் சாதனமானது நுன்கதையென்றும் நுன்பிணைவு என்றும் நுன் எடுத்தியம்பலென்றும் போஸ்ட்காட் ஸ்டோரியென்றும் சிறு சிறு கதைகள் என்றும் திடீர் கதையென்றும்
சிறுகதைத் துறையிலே பயன்படுத்தப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டவற்றின் இணையத்தொர்பாடலின் வளர்ச்சியோடு மிகச்சிறிய சிறுகதையாக்கங்களின் பிரவாகம் மேலௌத் தொடங்கியிருக்கின்றன ஆடம்பர அலங்காரங்களும் போதனைச்சொருகல்களும் வீண்பொருள் திணிப்புக்கள் எல்லாம் சாரம்சத்தோடும் அடிப்படைகளோடும் நின்றுவிடுதல் இவற்றிலே இடம்பிடிக்கின்றன சொற்களை மேலும் கீளும் சிக்கனப்படுத்தி எண்ணுக்கு முக்கியத்துவம் வழங்கி இப்போக்கினை பிற்போக்குச் செயற்பாடு என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றார்கள்.
சிறப்புரையில் பேராசிரியர் மௌனகுரு
சங்ககாலத்தில் பாட்டுக்குப் பொருளாக வந்தவர்கள் கடவுள்களும் மன்னர்களுமே இன்று இலக்கியங்களின் பாடுபொருளுக்குரிய நாயகர்களாக மாறியிருப்பது மக்களே
கலை இலகியமெல்லாம் வாழ்க்கையின் இயலாமையின் இடைவெளியை நிறப்புவதற்காக வருகின்ற ஒன்று எல்லோரும் ஒற்றமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் இந்த கலை இலக்கியத்திற்கு எந்த வேலையும் இருக்காது ஒரு அறிஞர் சொல்லியிருக்கின்றார்.
எழுத்தாளர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவும், வாசிப்பவர்களைத் திருப்திப்படுத்தவதற்காகவுமே இலக்கியத்தைப் படைக்கின்றார்கள் இந்த இலக்கியம் மனிதர்கள் தோன்றி மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வு தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை இந்த நிலை இருக்கின்றது.
இலக்கியத்திலே பொதுவாக இன்று பல்வெறு இலக்கிய வடிவங்கள் காணப்படுகின்றன நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் இவையெல்லாம் பல்வெறு இலக்கிய வடிவங்கள் காணப்படுகின்றன இத்தகைய இலக்கியங்களுக்கு நீண்ட கால வரலாறு இருக்கின்றது.
தமிழர்களின் சங்ககால இலக்கியம் தொடக்கம் இன்றையவரைக்கும் பல நூற்றாண்டு வரலாறு இருக்கின்றது இந்த வரலாற்று ஓட்டத்தில் ஒரு கால கட்டத்தில் கவிஞர்கள் கடவுள்களையும். மன்னர்களையும் புகழ்ந்து பாடினார்கள் எந்தப் புராணத்தை எடுத்தாலும், காவியங்களை எடுத்தாலும் பாட்டை எடுத்தாலும் அவற்றுக்குப் பொருளாக வருபவர்கள் கடவுள்களாகவும், மன்னர்களாகவுமே இருந்தார்கள்.
ஆனால் 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வெள்ளைக்காரனின் ஆட்சிவந்து பொருளாதாரம் மாறிய பிறகு சமூகம் தலைகீழாக மாறிய பிறகு சாதாரண மனிதர்கலெல்லாம் விழிப்புணர்வு அடைந்த பிறகு இலக்கியங்களின் பாடுபொருளும். கருப்பொருளும் மாறத்தொடங்கியது. இப்போது சாதாரண மக்கள் இலக்கியங்களின் பாடுபொருளுக்குரிய நாயகர்களாக மாறியிருக்கின்றார்கள்.
சிறுபான்மை மக்களைப் பற்றிப்பாடத் தொடங்கினார்கள் எழுதத்தொடங்கினார்கள் இந்த வருகையோடுதான் நமக்கு நாவலும். சிறுகதையும் நவீன கவிதையும் வந்தது இதற்கு மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளும் வாழ்க்கைகளுமே ஆகும்.






