ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு...!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் செப்டெம்பர் 13ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இரண்டாவது முறையாகவும் அறிவிப்பாணை விடுத்துள்ளது.

மாலபே தலாஹேன பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பந்தம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் இருந்து இவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்துச் செய்துவிட்டு, தண்டனை வழங்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பாணையை விடுத்திருந்தது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு நீதியரசர்கள் மாலினி குணரட்ன, தேவிகா டி லிவேரா தென்னகோன், ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -