புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை தொடர்பில் 3 தினங்களிற்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிகமாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த கிழமை புங்குடுதீவு பகுதிக்கு கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பகுதியை சேர்ந்த மாப்பிளை என்றழைக்கப்படும் நடராஜா குகநேசன்(வயது-38) மற்றும் உதய சூரியன் சுரேஸ்வரன் ஆகியோரை வித்தியா கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.
மேற்படி இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்ய சென்ற நிலையில் இக்கொலையுடன் தொடர்புபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களுடனும் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்வதாக அவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இருவரையும் தற்போது எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்வதாக அவர்களது உறவினர்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment