ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சிங்கள ராவய தேசிய அமைப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியே இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை போதிக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட பேரணி குறித்து சட்ட நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிங்கள ராவய எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
