நாவிதன்வெளி பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்திக்கு சமூக கண்கானிப்பு குழு


எம்.எம்.ஜபீர்-

நாவிதன்வெளி பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள சாளம்பைக்கேணி-02 சாலிஹீன் வீதி, மத்தியமுகாம் சிறி முருகன் கோவில் வீதி ஆகிய வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆராம்பிக்கப்பட்டடுள்ளது.

கடந்த காலங்களில் ஒரு சில பிரதேசங்களில் கொங்கிறீட் இடப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக இன்று காணப்படுவதினால் நாவிதன்வெளி பிரதேச சபையினால் சிறந்த வீதிகளை செப்பனிடும் நோக்கில் நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டியின் முன்னடுப்பில் சமூக கண்கானிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டங்களை சமூக ரீதியாக காண்கானிப்பு செய்வதற்காக பிரதேசங்களில் நியமிக்கப்பட்ட சமூக காண்கானிப்பு குழுவுக்கு வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் பிரதேச சபை அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி, நாவிதன்வெளி பிரதேச சபை தொழில் நூட்ப உத்தியோகத்தர் சுபாஷ; சுந்திரயோஸ், நாவிதன்வெளி பிரதேச சபை உதவியாளர் திருமதி எஸ்.றகுலேசன், காண்கானிப்புக் குழு உறுப்பினர்கள், கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -