காரைதீவு குறூப் நிருபர் சகா-
அம்பாறையில் ஆரம்பமான உத்தேச அரசியல் யாப்பிற்கான மக்கள் கருத்தறியும் முதல்நாள் அமர்வு சனிக்கிழமை அம்பாறை கச்சேரியிலுள்ள எ.ஜ.விக்ரம மண்டபத்தில் ஆரம்பமானது.
குழுவில் தலைவர் கலாநிதி ஹரீன் அமரசூரிய உறுப்பினர்களான சட்டத்தரணி என்.செல்வகுமாரன் சட்டத்தரணி எஸ்.சி.சி.இளங்கோவன் உள்ளிட்டோர் சாட்சியங்களை பதிவுசெய்வதையும் முதல்சமர்ப்பணத்தை அம்பாறைமாவட்ட சிவில் அமைப்புகளின் குழு சார்பில் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் பேரவையின் செயலாளரும் இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கத்தின் தலைவருமான வி.ரி.சகாதேவராஜா தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியாசேனாதிராஜா ஓய்வுநிலை சிரேஸ்ட சிறுவர்நன்னடத்தை அதிகாரி எ.உதுமாலெவ்வை மனித அபிவிருத்தித்தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் உதவி இணைப்பாளர் எம்.ஜ.எம்.றியால் மகளிர் அணியின் சார்பில் பி.ஜெனிற்றா றிலீபா பேகம் ஆகியோர் பிரசன்னமாகி சாட்சியமளிப்பதையும் காணலாம்.



