முன்பள்ளிஆசிரியர் கொடுப்பனவில் அநீதி - அம்பாறை தமிழ்மொழி முன்பள்ளி ஆசிரியர்கள் பேரவை சீற்றம்

காரைதீவு நிருபர்-வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறைமாவட்டத்தில் பல்லாண்டுகாலம் தன்னலம் கருதாது பல்லாண்டுகாலம் சேவையாற்றிவந்த நூற்றுக்கணக்கான முன்பள்ளி ஆசிரியர்கள் அண்மையில் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மாதாந்த கொடுப்பனவில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ்மொழிமூல முன்பள்ளி ஆசிரியர்களின் வலைப்பின்னல் இப்பாரபட்சம் குறித்து தமது கடுமையான ஆட்சேபனையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளதோடு உடனடியாக இந்நடைமுறை நிறுத்தப்படவேண்டுமென கோரியுள்ளது.

அதேவேளை சேவைமூப்பு கருத்திற்கொள்ளப்பட்டு சகலருக்கும் இக்கொடுப்பனவை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென மேற்படி வலைப்பின்னல் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

காரைதவிலுள்ள மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைமைக்காரியாலய கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் உள்ளக்குமுறல் சந்திப்பின்போது பல கருத்துக்கள் வெளிவந்தன.

வலைப்பின்னலின் உதவி இயக்குனர் எம்.ஜ.எம்.றியால் கூறுகையில்:

மனித அபிவிருத்தித்தாபனத்தின் ஏற்பாட்டில் 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மேற்படி வலைப்பின்னல் கிழக்குமாகாணசபையூடாக வழங்கப்படுமென இதுவரை கூறப்பட்டுவருகின்ற மாதம் 3000 ருபா கொடுப்பனவு தொடர்பில் குரல்கொடுத்துவந்தது.

அதுமட்டுமல்லாமல் தொழிலாளர் தினத்தில் முன்பள்ளிஆசிரியர்களை நிரந்தமாக்கவேண்டும் அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் ஊர்வலம் நடாத்தி அழுத்தம்கொடுத்துவந்துள்ளதோடு தேர்தல் விஞ்ஞாபனத்தயாரிப்பின் போது இவ்விடயத்தையும் எத்திவைத்தது.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் அவ்வப்போது கடிதமூலம் இவ்வாசிரியர்களின் கொடுப்பனவு பற்றி எழுத்துமூலம் அறிவித்துவந்துள்ளது.

இந்நிலையில் சேவைமூப்பை முற்றாக உதாசீனம் செய்துவிட்டு மத்தியஅரசின் மகளிர்விவகார அமைச்சு மாதாந்தம் 250ருபா வீதம் கடந்த வருடத்தின் ஏழு மாதங்களுக்கு 1750ருபாவை கடந்தமாதம் வழங்கியுள்ளது.

ஆக க.பொ.த. உயர்தரத்தில் 3பாட சித்தியையும் முன்பள்ளி டிப்ளோமாவையும் மாத்திரம் கருத்தில்கொண்டு இக்கொடுப்பனவிற்கான தகைமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை நாம் வன்மையாக ஆட்சேபிக்கின்றோம். இந்நடைமுறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

கிழக்குமாகாணசபை வழங்குவதாகக்கூறிய 3000ருபா கொடுப்பனவு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அரசியல்வாதிகள் அவ்வப்போது முன்பள்ளிஆசிரியர்களை சந்தோசப்படுத்துவதற்காக ஜனவரிக்கு வருகிறது! சித்திரைக்குவருகிறது! என்பார்கள். 

இதற்கிடையில் கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்படாத முன்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கட்டுப்படுத்த திணைக்களத்தின் முன்பள்ளி உத்தியோகத்தர்கள் ஒருபுறம் முன்பள்ளி வாரியம் மறுபுறம் தற்போது மகளிர்சிறுவர் விவகார முன்பள்ளிப்பராய உத்தியாகத்தர்கள் ஒருபுறம்.

ஆக எமது ஆசிரியர்களின் ஜீவனோபாயம் இன்னும் பழையபாணியிலேயே சென்றுகொண்டிருக்கிறது. 

ஏந்தவாரியத்தாலும் பலனில்லாத துர்ப்பாக்கியநிலை எழுந்துள்ளது வேதனைக்குரியது என்றார்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட முன்பள்ளிப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பத்திராஜிதவிடம் கேட்டபோது:

எமக்கு அமைச்சு விடுத்த நியமங்களுக்கமைய பிரதேச செயலக ரீதியாக முன்பள்ளி ஆசிரியர்களின் தரவுகளை பெற்று அவர்களுள் க.பொ.த உயர்தரத்தில் 3பாடசித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமா சித்தியுமிருந்தால் இக்கொடுப்பனவிற்கு தகுதியுடையவராக கருதப்பட்டனர்.

ஆதன்படி கடந்த வருடத்தில் 1300 முன்பள்ளிஆசிரியர்கள் இக்கொடுப்பனவிற்கு தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வருடம் சிலவேளை க.பொ.த. சா.தரம் கவனத்திற்கொள்ளப்படலாம் என் நினைக்கின்றேன் என்றார்.

வலைப்பின்னல் உறுப்பினரான சம்மாந்துறையைச்சேர்ந்த நஜீமுன்நிசா வேதனையோடு கூறுகையில்:

நான் கடந்த 21 வருடங்களாக சம்மாந்துறையில் முன்பள்ளி ஆசிரியையாக அர்ப்பணிப்பபுடன் சேவையாற்றிவருகின்றேன். 

இக்கொடுப்பனவிற்னெ சம்மாந்துறை பிரிவில் 58ஆசிரியர்களுள் ஆக 33பேரே தெரிவுசெய்யப்பட்டு மேற்படி 1750 ருபா கொடுப்பனவினைப் பெற்றுள்ளனர்.

முன்னதாக மனித அபிவிருத்தித்தாபனத்தின் வலைப்பின்னலூடாக திருகோணமலை சென்று நாம் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவ. சுந்திரகாந்தனைச்சந்தித்து முன்பள்ளிவாரியத்தினூடாக எமக்கான 3000ருபா கொடுப்பனவினை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரியிருந்தோம்.

எங்களை நிரந்தரமாக்கி கொடுப்பனவு வழங்கவெண்டுமெனக்கோரி எத்தனை ஊர்வலங்களை போராட்டங்களை கூட்டங்களை நடாத்தியிருந்தோம்.

இப்படி நாம் கடந்த 20 25 வருடங்கள் குழந்தைகளோடு கிடந்து செத்த எங்களை புறந்தள்ளிவிட்டு கொடுப்பனவு என்று கேள்விப்பட்டதும் புதிதாக முன்பள்ளியைத்திறந்து நேற்றுவந்த ஆசிரியைகளுக்கு இன்று கொடுப்பனவை மத்தியஅரசினர் வழங்கியுள்ளனர்.

இதனை பாரபட்சம் அநீதி என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது? வயிறு பற்றியெரிகிறது. 1ருபா காசென்றாலும் இவ்வளவுகாலமும் இலவுகாத்தகிளிபோல் காத்துக்கிடந்த எங்களுக்கும் வழங்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே இந்நடைமுறையை உடனடியாக நிறுத்தி சேவைக்கு மதிப்புவழங்கி எங்களையும் உள்வாங்கி நேர்மையான சீரான முன்பள்ளிக்கலாசாரத்தை உருவாக்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.

காரைதீவின் முன்பள்ளிவாரிய தலைவி எம்.வத்சலா கூறுகையில்:

காரைதீவிலிருந்து இக்கொடுப்பனவிற்காக 45முன்பள்ளிஆசிரியர்களின் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் ஆக 09பேரின் பெயரே சிபார்செய்யப்பட்டு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இது எம்போன்ற நீண்டகாலம் சேவைசெய்தவர்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதோடு வேதiனைக்குள்ளாக்கியுள்ளது.

கிழக்குமாகாணசபையினால் வழங்கப்படும் என்ற 3000ருபா கொடுப்பனவுகூட இன்னுமில்லை. அதற்குள் புற்றீசல் போன்று புதிதுபுதிதாக முன்பள்ளிகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் எமது பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னுமின்னும் எங்களை வேதனைப்படுத்தியதுதான் மிச்சம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -