பிக்குகளை போல வேடமிட்ட சிலர் புத்தமதத்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயற்பாடு ஒன்றை முன்னெடுக்கப்பட்டு வருதாக கலாநிதி பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிட்டார்.
ரத்மலான பிரதேசத்தில் இடம்பெற்ற இளம் பிக்குகளுக்கான இரண்டு நாள் பயிற்ச்சி பட்டறையில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இளம் பிக்குகளிடத்தில் உரையாற்றிய அவர்;
பிக்குகளை போல வேடமிட்ட சிலர் புத்தமதத்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அசோகர்களை போல செயற்படுகிறார்கள்.
பிக்குகள் மதில்களில் ஏறி தாவிக்குதிக்க்கிறார்கள் மரங்களில் ஏறி ஆர்பாட்டம் செய்கிறார்கள் பொலிசாரை தாக்குகிறார்கள் இவை அனைத்தும் ஊடகங்கள் ஊடாக உலகமெங்கும் செல்கிறது.
இவர்களின் நடவடிக்கைகளால் இலங்கை பிக்குகள் வன்முறையாளர்கள் என்ற தவறான கருத்து கொண்டு செல்லப்படுகிறது என குறிப்பிட்டார்.