கிழக்கு முதலமைச்சர் பிரதேசவாதத்தை தூண்டுகிறார் - கல்வி இராஜாங்க அமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட். ஏ. நசீர் அஹமட், கல்வி ராஜாங்க அமைச்சர் மலையகத்தில் இருந்து வந்து மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார் என்ற தலைப்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

அவர் தெரிவித்துள்ள கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை ராஜாங்க அமைச்சர் விடுத்துள்ளார்.

ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது முற்றிலும் பிழையான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.

அரசியல் அனுபவம் அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவருடைய செயற்பாடாகவே உள்ளது. 

மேடை பேச்சு நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன், கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரையும் சென்றடைகின்ற காரணத்தால் இடம், பொருள், ஏவல் அறிந்து உரையாற்றுவது பொருத்தமானவு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் அக்கீமுடனும் அதேபோல அமைச்சு றிசாட் பதூர்தினுடனும் ஒரு சுமுகமான உறவை கொண்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதானது எமது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற விடயங்களை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.

தாங்கள் மலையகத்தில் இருந்து வந்தவர் என குறிப்பிட்டிருப்பதானது பிரதேசவாதத்தை தூண்டும் ஒரு செயலாகவே தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -