'எடிசன்' விருது பெற்றார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்

தமிழ் மூவி டாட்காம் மற்றும் உலகின் ஒன்பது தொலைக்காட்சிகள் இணைந்து நடத்தும் 9 ஆவது 'எடிசன்' தமிழ் திரைப்பட விருது விழா அண்மையில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தமிழ் திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் தமது திறமையை வெளிப்படுத்திய ஜெயம்ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா உட்பட பல முன்னணிக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் 'நான்' திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவில் தடம்பதித்த நம்நாட்டு கவிஞர் ,திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினைப் பெற்றுக்கொண்டார். இவருக்கான விருதினை பிரபல திரைப்பட நடிகை குட்டி பத்மினி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கவிஞர் பாடிய தமிழ் உணர்வுக்கவிதை பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -