சிங்கப்பூரிற்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் மத்திய மாகாண சபையின் உறுப்பினர், பெண் ஒருவரை தீண்டியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் மத்திய மாகண சபை உறுப்பினர்கள், சிங்கப்பூரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில், தானியங்கி படிக்கட்டில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவரை மாகாண சபை உறுப்பினர், ஒருவர் தீண்டியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் , குறித்த பெண் இது தொடர்பாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவிடம் தகவல் வழங்கியமைக்கு அமைவாக, அதன் போது இருந்த அனைத்து மாகண சபை உறுப்பினர்களும் கைது செய்யப்படனர்.
பின்னர் சி.சி.டி.வி காணொளியின் சோதனையின் பிறகு அவர்கள். பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை
இதேவேளை சிங்கப்பூரிற்கான விஜயத்தை மேற்கொண்ட மாகாண சபை உறுப்பினர், ஒருவரிடம் வினவிய போது, இன்னும் ஒருவாரத்தில் நாடு திரும்புவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
