எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2000ம் மில்லி கிராம் கஞ்சாவைத் தம் வசம் வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐஎன்.றிஸ்வான் ஞாயிற்றுக்கிழமை (17)உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை புதிய நகரம் பகுதியைச் சேர்ந்த வீரகே கென்றி லஸ்மன் வயது(35) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைநூல் பகுதியில் மணல் ஏற்றுவதற்கு சென்றிருந்த லொறி சாரதியொருவரே இரண்டாயிரம் மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்த போது மூதூர் பொலிஸார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த நபரை சனிக்கிழமை (16)மாலையில் கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
