பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிய ஒழுங்கு விதிகள் உள்ளடக்கிய சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பௌத்த பிக்குகளின் நடத்தைகள் குறித்தான ஒழுங்கு விதிகள் உள்ளடக்கிய சட்ட மூலத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகின்றது.
இதனை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்.
இல்லையேல், தேரர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ எச்சரித்துள்ளார்.
