மைதானத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்னும் போர்வையில் நற்பிட்டிமுனை மக்களை கோமாலியாக நினைத்துக்கொண்டிருக்கும் மாநகர முதல்வரே!
எமது கிராமத்து மக்கள் உங்களுக்கு ஏதும் துரோகம் செய்தார்களா..? எதற்காக எங்கள் மாணவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், இளைஞ்சர்களுக்கும், இவ்வாறான ஒரு சோதனையை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்?
எல்லா கிராமத்து மைதானங்களும் மணல் கொண்டு நிரப்பப்படும் போது எங்கள் ஊர் மைதானத்தை ஏன் அழுக்கைக் கொண்டு நிரப்ப நினைத்தீர்?
நீங்கள் கொட்டுகின்ற குப்பைகளால் பாதிக்கப்படுகிறவர்ள் வேறு யாரும் இல்லை எமது நற்பிட்டிமுனை மக்கள் மாத்திரம்தான் என்பதை மறக்க வேண்டாம்.
நீங்கள் குப்பை கொட்டுகின்ற இடம் மைதானமாக இருந்தாலும் அதை சுற்றியுள்ளவர்கள் உங்களை போன்ற மனிதர்கள்தான் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.
எமது மக்களால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த அமானிதம் (பதவி) அதை கொண்டு எமது மக்கள்ளின் நிம்மதியை கெடுக்க நீங்கள் போட்டிருக்கும் இத் திட்டம் உங்கள் எதிர்காலத்தை சீரளிக்கும். இது நாற்றத்தால் சீரளியும் எமது மக்களின் சாபம் உங்களுக்கு என நாற்பட்டிமுனை பிரதேசவாசி முபாரக் தெரிவித்தார்.



