மாடறுப்பு விவகாரம், அரசாங்கத்தின் கருத்தல்ல என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தாகும். அவை தொடர்பில் ஆராயலாமே தவிர, அதுவொரு பிரச்சினையல்ல என்றும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நிறைவடைந்ததன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அலவளாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மாடறுப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பேசுவதாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவர்கள் பேசவும் இல்லை, அவ்வாறு எதுவுமே நடைபெறவுவில்லை.
மாடறுப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்துதெரிவித்துள்ளார். அதனை விவாதத்துக்கு உட்படுத்துவது உசித்தமானதாகும் என்றார்.
