பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிக்குகள் சட்டமூலம் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டியதில்லை.
அடிப்படைவாத, இனவாத சிந்தனையுடைய சிலர் இது தொடர்பில் நச்சுக் கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால், பிக்குகள் சமூகத்துக்கு பரஸ்பர சுதந்திரம், சுயாதீன நிருவாக முறை, ஒரு ஒழுங்குமுறையொன்று வகுக்கப்படுகின்றது.
சங்க சபைகளுக்கு தனியான நீதிமன்ற முறையுடன் கூடிய சாதாரண அடையாளம் கொண்ட ஒரு சங்க கலந்துரையாடலை உருவாக்குவதே இந்த சட்ட மூலத்தின் நோக்கம் எனவும் ஆனமடுவயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வேந்தர் மேலும் கூறியுள்ளார்.