அவன்காட் நிறுவனத்திற்கு ஆயுதம் கடத்திய கோட்டாபயவின் தமயந்தி மாயமானார்..!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்த காலத்தில், அவ்வமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய தமயந்தி ஜயரத்ன, எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக அறிய முடிகின்றது. அவர், தற்போதைய ஆட்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.

அவன்காட் நிறுவனத்திற்கு ஆயுதம் வழங்குவதற்கு முந்திய அரசாங்கத்தின் காலத்தில் முன்னின்று செயற்பட்டதாக கூறப்படும் அவரை, கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார். 

ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய மோசடி, ஊழல் அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளித்திருந்தார் என்பதுடன் அவருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -