நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணதுடன் கல்முனையில் மைதானம்...!



ஹாசிப் யாஸீன்-

ல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தினை நவீன முறையில்அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார்.

இம்மைதான அபிவிருத்திற்கான திட்ட வரைபடங்களை விளையாட்டுத்துறை அமைச்சின்நிபுணத்துவக் குழுவான சீ.ஈ.சீ.வீ நிறுவன பொறியியலாளர் குழுவினர் தயாரித்துள்ளதுடன்இவ்வரைபடங்களுடன் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இந்நிபுணத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (19)சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது இம்மைதானத்தினை 400 மீற்றர் மைதானமாக வடிவமைத்தல், நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணம், வடிகாலமைப்பு திட்டம், வாகன தரிப்பிடம் நிர்மாணம் என்பன பற்றி நிபுணத்துவக் குழுவினர் வரைபடங்களுடன் பிரதி அமைச்சருக்குவிளக்கமளித்தனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸூடனான இவ்விஜயத்தின் போது சீ.ஈ.சீ.வீ நிறுவனத்தின் உதவிப்பொது முகாமையாளர் பொறியியலாளர் தம்மிக்க தர்மவர்தன, சிரேஷ்ட படவரைஞர் பிரனீத்அமரதுங்க, திட்ட முகாமையாளர் பொறியியலாளர் அகில ரங்க பண்டார, தென்கிழக்கு உதவிபொது முகாமையாளர் பொறியியலாளர் சரித் குணதிலக, கிழக்கு மாகாண திட்டமுகாமையாளர் பொறியியலாளர் எம்.ஏ.றிஸ்கான, கல்முனை மாநகர ஆணையாளர்ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -