தரம் 5 ,6 பாட விதானங்களில் மாணவர்களுக்கு அழுத்தம் - ஜனாதிபதி

அரச பாடசாலைகளில் காணப்படும் தரம் 5 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான பாட விதானங்களினால், மாணவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக  பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், பிள்ளைகளின் மனதுக்கு பாரமில்லாத வகையில் பாடசாலை பாட விதானங்களை தயாரிக்குமாறு கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செலயகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு பிரபல பாடசாலைக்கும் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்காக தான் எவருக்கும் கடிதங்கள் வழங்கியதில்லை. சகல பாடசாலைகளும் ஒரே மாதிரி அபிவிருத்தி செய்யப்பட்டு பிள்ளைகளுக்கு சமமான கல்வி கற்கும் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -