ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளிலும் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்கும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், சுகாதார பிரதியமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.திரவியராஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சுல்பிகார் உள்ளிட்ட உயரதிகாரிகள், நிந்தவூர் பிரதேசத்திலுள்ள அரச, தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவித்தனர்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், கடற்றொழில், வீதி அபிவிருத்தி, மின்சார வசதி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு, தோட்டப் பயிர்ச் செய்கை, சமூக சேவைகள், தொழிற் பயிற்சி, சமாதான சபை, பொலீஸ், நீதிச் சேவைகள் போன்றவற்றினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராயப்பட்டு, சிறந்த முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவிக்கின்றார்.


