அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கணிப்பு எதிர் வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது கொழும்பு – விசும்பாயவில் அமைந்துள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆலோசனை குழு செயலாளர் காரியலயத்தில் இடம் பெறும்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் ஆலோசனைகளை தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் முன்வைக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கமான 0112 437 676 ம், தொலைநகல் இலக்கமான 0112 328 780 மூலம் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.
