ஹிருனிக்காவின் மாமி ராஜதந்திரியாகிறார்...?

னாதிபதி மைத்திரி பால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது.

இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி குணரட்ன அமரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.

இவர் ஹிருனிக்காவின் தந்தையான பாரத லச்மன் பிரேமசந்திரவின் சகோதரியாவார்.

இது தொடர்பில் கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியுறவு அமைச்சை வினவியபோதும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாம் நியமனக்கடிதத்துக்காக காத்திருப்பதாக சுவர்ணா குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சுவர்ணாவை பொறுத்தவரை அவர் இதற்கு முன்னர் எந்தவொரு ராஜதந்திர பதவியையும் கொண்டிருக்காத அனுபவமற்றவர் என்று ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -