அட்டாளைச்சேனை: பொலிசாரை கண்டு ஓடியவர்கள் கைது (பணம் மற்றும் தொலைபேசிகள் மீட்பு)

பொலிசார் வீதி ரோந்து நடவடிக்கையின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று  (08/01/2016) வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 16 வயதுடைய 3 பேர் உட்பட 4 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களிமிருந்து 7 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன 

அதேவேளை பொலிசாரை கண்டு ஓடிய ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்து கைது செய்த போது அவர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என பொலிசாரின் விசாரணயில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -