கடந்த வாரம் வெளியிடப்பட்ட 2015ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பேறுபேறுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை கிராமத்திலிருந்து மூன்று மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அப்துல் ஸலாம் முகம்மட் அஸ்கர் - A BB
முகம்மட் நிசார் முகம்மட் நதீம் - BBB
லாஹிர் முகம்மட் ஆசிப் - ABC
என்ற பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன் முறையே 18,30,32 எனும் மாவட்ட நிலையை பெற்றுள்ளனர்.
இதில் ASM.அஸ்கர், MNM.நதீம் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளின் புதல்வர்கள் என்பதுடன் மருதமுனை ஸம்ஸ் கல்லூரி மாணவர்கள் என்பதும் LM.ஆசிப் அட்டாளைச்சேனை தேசிய கல்லூரி மாணவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பாலமுனை மண்ணுக்கு மகுடம் சேர்த்த இவ் கல்வி முத்துக்களை பாலமுனை சமூகம் மனதார வாழ்த்தி இறைவனை பிரார்த்திக்கின்றது.
அய்ஷத் ஸெய்னி.



