மாட்டிறைச்சியின் மூலம் எழுச்சி பெற முயழும் பௌத்தமும் கொக்கரிக்கும் முஸ்லிம்களும்....!

யு. எச். ஹைதர் அலி-

லங்கை முஸ்லிம் சகோதரர்களுடைய அநேகமான பேஸ்புக் எல்லாம் நேற்றில் இருந்து மாட்டிறைச்சி பற்றி பேசுவதை அவதானிக்க முடிந்தது. 

அதேபோல் இலங்கை முஸ்லீம் சகோதரர்களுக்கு சொந்தமான ஒரு சில செய்தி இனையத்தளங்களும் இலங்கை முஸ்லிம்களின் ஒரு மார்க்க கடமைக்கு இலங்கை அரசு தடைவிதிக்க முற்படுவதைப்போல் இந்த மாடு அறுப்பு விடையத்தைப்பற்றி ஜனாதிபதியின் கூற்றை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. 

மறுபுரம் முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் தேட முனையும் முஸ்லீம் இனவாத கட்சியும் ஜனாதிபதியின் மாடு அறுப்பு கூற்று சம்பந்தமாக ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்போகிறோம் என்று அறிக்கைவிட்டு பிச்சைக்கார பிளைப்பு நடத்தும் முஸ்லிம் இனவாத அரசியல் அநாதைகள். 

இன்னொரு புரம் அரபிகளின் றியால்களில் அரபிகளின் குர்பானை இலங்கையில் கொடுத்து வயிற்றுப்பிளைப்பு நடத்தும் தஃவா வியாபாரிகள் ஜனாதிபதிக்கு விடும் கண்டனங்கள். 

இலங்கையில் பெரும்பான்மை சமூகம் மாடு அறுப்பதை அவர்களின் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் , அவகளின் பஞ்சமா பாவங்களில் ஒன்றாகவும் கருதுகிறார்கள். நாம் இவ்விடத்தில் அவர்களது உணர்வுகளை மதிக்காது எமக்கு மாட்டிறைச்சி சாப்பிடுவது கட்டாய மார்ககக்கடமையப்போல எண்ணி மாடு அறுப்பதையும் சாப்பிடுவதையும் தவறாமல் செய்து வருகிறோம்.

மாட்டிறைச்சி சாப்பிடாவிட்டால் இலங்கை முஸ்லிகள் இறந்து விடுவதைப்போலும். இலங்கை அரசு முஸ்லிம்களின் மாட்டிறைச்சி சாப்பிடும் மார்க்க கடமையை தடை செய்ய முற்பட்டு விட்டதைப்போன்று அறிக்கைகளும் கண்டனங்களும் முக நூலை கலக்குகிறது.

முதளில் முஸ்லிம்களாகிய நாம் எங்கு தவறு விட்டோம் என்று சிந்திக்கின்றோமா ?

1. ஊருக்கு ஒரு இறைச்சிக்கடையை தெருவுக்கொரு கடைகளாக்கி , இறைச்சிக்கடை Tender ஐ ஏற்றிவிட்டு நகர சபை chairman முதல் PHI வரை லஞ்சத்தை வாரி இறைத்தவர்கள் நம் முஸ்லீம்கள்.

2. ஒரு சில ஊர்களில் ஒருவருக்கு இறைச்சிக்கடை Tender கிடைக்காததனால் கிடைத்தவருக்கு எதிராக பெரும்பான்மை பிக்குமார்களை தூண்டி விட்டவர்களும் நம் முஸ்லிம்கள் தான்.

3. உள்கியாவை ஆண்டான்டு காலமாக எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். இஸ்லாம் கூட்டாக சேர்ந்து கொடுக்கச் சொல்லும் சமூக வறுமை ஒழிப்புக்கடமையாகிய சக்காத்தை கூட்டாக கொடுப்பதை புறக்கனித்துவிட்டு உள்கியாவை கூட்டம் சேர்த்து டிக்கட் அடித்து தம்பட்டம் அடித்து எப்போது செய்ய ஆரம்பித்தார்களோ எம்மவர்கள் அன்றில் இருந்து ஆரம்பித்தது வினை.

4. அரேபியரின் உள்கியாவிற்காக எமது நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் வீணான தப்பபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டோம். 

5. இந்த தப்பபிப்பிராயங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்புக்களும் இயக்கங்களும் தத்தமது நிறுவனத்திற்கான வெப்சைட்களில் எத்தனை மாடு உளுகியா கொடுத்தார்கள்.


என்று முழு விபரத்தையும் அந்த வெப்சைட்களில் பிரசுரித்து தத்தமது இயக்கங்களை அரபிகள் விளம்பரப்படுத்த முற்பட்டதனால் வந்த விளைவு.

ஏனைய சமூகங்களையும் அவர்களின் மத உரிமைகளையும் கடமைகளையும் உணர்வுகளையும் மதிக்காதவர்களாகவும் சுயனலனுக்காக வாழும் ஒரு சமூகமாகவும் நாம் வாழ பழக்கப்பட்டதனால் வந்த விளைவுகள் தான் இவைகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -