கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவருக்கு 3.2 மில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமாக முறையில் வழங்கியமை குறித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுவர்தனவுக்கு எதிராக அண்மையில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
சட்டவிரோதமான முறையில் 412 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
